திங்கள், 7 செப்டம்பர், 2009

தேசீய உயர் நிலைப் பள்ளி






ஒன்பதாவது வகுப்பு மெயின் பில்டிங்கில்எஸ்.பி (S. Balasubramaniam) என்கிற சிறந்த மனிதர் எங்கள் வகுப்புஆசிரியர்கம்பீரமான தோற்றம்கலகலப்பான பேச்சுடீக்கான உடைஇடத்துக்கேற்ற பாவனை. நாம்கற்றுக்கொள்ள வேண்டிய எவ்வளவோ விஷயங்கள் உள்ள மனிதர்நகைச்சுவை அதிகம்நன்றாகப் பேசுவார்.எந்த நிகழ்ச்சியிலும் அவருக்கு முன்னுரிமை உண்டு.
எல்லாருக்கும் கட்டு மேனிக்கு பட்ட பெயர் வைப்பார்அந்த பெயர் நிலைத்து உண்மை பெயர் மறந்துபோய்விடும்கதக்,,பழபழசொம்புஓசிபீசி போன்றவை உதாரணம்அவரிடம் படிததவர்களுக்கு, நாலு கால்மண்டபமும் கழுதையும் நன்றாக ஞாபகம் இருக்கும்அவர் வேலைக்கு வந்து சம்பாதிக்க வேண்டியதில்லைஎன்பதை (நிஜமா?அடிக்கடிசொல்வார்சில்லரையாக மாற்றி அக்கரைக் குளத்திற்குப் போய் ஒரு ரூபாயாககாசில் தெத்திக்கல் விடும் அளவிற்குபணம் இருப்பதாகச சொல்லி அசத்துவார்.(ஒரு ரூபாய் எங்களுக்கு மிகப்பெரிய விஷயம் -எட்டு வெங்காய தோசை தோப்பு துரை ஹோட்டலில் சாப்பிடலாம் அதில்தான் ஜென்மசாபல்யம் அடைவோம்). நேரு பிறந்த நாள் என்றால் அவர் மாதிரியே ஷெர்வானி அணிந்து காட்சி தருவார்.கதா காலட்ஷேபம் செய்யும்போது பஞ்ச கச்சம் சிப்லா க்ட்டையுடனும்சர்ரணர் தினம் என்றால் ஸ்கார்ஃபுடன் மார்புக்கு மேல் ஏறிய பாண்ட் சஹிதமாகவும் சபாக்கச்சேரிக்கு ஜிப்பா வேஷ்டியுமாகவும் அனேகமாக பொருத்தமாக வரும் அவரை சராசரி ஆசிரியராகக் கருதக்கூடாது என்று அவர் கருதியது நியாயமே புதிய எண்ணங்களுக்கும்முயற்சிகளுக்கும் வித்தியாசமாக ஆதரவு தருவார. சுற்றுலா செல்வதற்கு ஸ்பான்சர் ஏற்பாடு செய்வது என ஈடுபாடு கொள்வார்மிகச் சிறிய நெருங்கிய மாணவர்களிடம் அவர் சென்னைப் பயணம் பற்றி கூறுவார்நம்புவது நம்பாதது அவரவர் இஷ்டம்நமப முடியாததை நம்புவதில் ஒரு த்ரில் இருக்கும்தானே !
நம்ம ஸ்கூலில் உதவி தலமை ஆசிரியருக்கு மேல் ப்ரொமோஷன் இல்லை என்ற நிலையில் வெளிப்பாளையம் நள தமயந்தி ஸ்கூலுக்ககு தலமை ஆசிரியராகச் சென்றார். பெருமாள் கோவில் சன்னதியில் இருந்த அவ்ர் வீடடிலிருந்து குதிரை வண்டி கிடைக்காவிட்டால் மேல ரோட்டில் கம்பீரமாக நடப்பதை பார்த்து நான் வியந்ததுண்டுநாங்கள் நண்பர்கள் 'மீட்'டுக்கு நாகை செல்லலும்போது, அவரை போய்ப் பார்ப்போம். அக்கறையுடன் விஜாரிப்பார்நிறைந்த ஆயுள் வாழ்ந்து மறைந்தார்.
பெரிய பண்டிட் பெயருக்கு ஏற்ற உருவம்க்ணீர் குரல்அதிகமாக கோபம் வராதுஎப்பொதும் எதோ யோஜனையில் இருப்பார்சின்ன பண்டிட் (அமைதி பண்டிட்நேர் மாறுதல்.மூக்கு நுனியில் கோபம் தயாராக இருக்கும்அமைதி அமைதி என்று அமைதியை குலைப்பார்சோமசுந்தரம் ப்ண்டிட் சாந்த சொரூபிமிக இனிமையானவர்நல்ல குரல் வளம் உள்ளவர்மார்கண்ட செட்டி தெருவில் மணி வீடுக்கு எதிரில் இருந்தார்.அவருக்குக் குழந்தைகள் இல்லைஎன் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்மணி அவர் வீட்டிலேயேதான் இருப்பான்பல வருடங்களுக்குப் பிறகு, வளர்ப்பு மகனுடன் சென்னையில் ஓரிரு முறை பார்த்தேன்.
    எஸ். எஸ் பதினொன்றாம் வகுப்பு ஆசிரியர்நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டுகாளி உபாசகர்.சந்தானம் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி இருந்தார்ஹெட்மாஸ்டருக்கும் இவருக்கும் ஷஷ்டாஷ்டகம்.வகுப்பில் தாராளமாக அவரை திட்டுவார்.
     கே. துரைசாமிப் பிள்ளை என்கிற கேடிபிள்ளைஇவர் எங்களுக்கு வகுப்பு ஆசிரியர் அல்லஆனாலும் நானும் சந்தானமும் இவரிடம் ப்ரைவேட் என்று மருவப்பட்ட ட்யூஷனுக்கு சென்றோம்மாதம் ரூபாய் ஃபீஸ்எந்த மாதமும் முழுதாகக் கொடுத்ததில்லைஎங்கள் செலவுக்குக் கொஞ்சம் எடுத்துக்கொள்வோம். (செலவு என்ன செலவுநித்யானந்த பவன் நெய் தோசைககு யார் பணம் தருவாங்க ?).ஃபீஸ் கொடுக்கும்போது சீனுவாசன் ஸார் பற்றிப் பேசுவோம்அவ்ளவ்தான்.ஃபீஸை மறந்து, அவரை திட்டத் தொடங்குவார்அது போதுமே எங்களுக்குபாதி நேரம் இங்கர்சாலை (அவர் மகன்திட்டுவார்இல்லாவிட்டால் அவர் ஊர் கமுதியைப் பற்றிப் பிரலாபிப்பார்பிதகோரஸை மூட்டை கட்டி வைத்துவிட்டு உம் கொட்டிவிட்டு வீடு வந்து விடுவோம்.அருமையான நாட்கள்(தொடரும்)









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக