புதன், 12 மே, 2010

தவளையார் சொல்கிறார்.

புதன், 9 டிசம்பர், 2009

Calendar 2010


சனி, 31 அக்டோபர், 2009

நண்பர்களுக்கு வலை விரிக்கும் ...








Here, I have written an article about my friends with the hope I may get some lead about our old school friends. Please help me ... Rangan.
 என் இனிய நண்பர்கள்.

நான் நாகையில் 1953யிலிருந்து 1964வரை பள்ளியில் படித்த காலத்தில் எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். பலவேறு கால கட்டத்தில் நட்பு பலப்பட்டது. பல்கிப் பெருகியது. சில நட்புக்கள் ஆழப்பட்டது. சில சுருங்கின. சில நண்பரகள் கருத்து வேறுபட்டு விலகினர்.


ஆனால் பொதுவாக நட்பு வட்டம் பெருகி வளர்ந்தது. சந்தானம், ராமன், சிவராமகிருஷ்ணன், முத்து ரத்தினம்.போன்றோரின் நட்பு முதல் வகுப்பு தொடங்கி, பள்ளி இறுதிவரை தொடர்ந்தது. சில நண்பர்கள் அவர் தம் பெற்றோரின் அலுவல் மாற்றம் காரணமாகத் தொடர இயலவில்லை. அந்த வகையில் நான் நாகநாதர் கோவில் சன்னதி தெருவில் வசித்த ஜி.ராம்குமார், ஞானப்பிரகாசம், திருக்கடையூர் நாகராஜன், பாண்டியன், வங்கி ஏஜண்ட் மகன் மூர்த்திவாசன், கஸ்டம்ஸ் ஆபிஸ் சூபரிண்டெண்ட் மக்ன் ,மணி (பாலக்காட்டு கொழுக்குமொழுக்கு பையன்) போன்றோரின் பிரிவை இன்றும் உணர்கிறேன். பள்ளி இறுதிவரை வலுப் பட்ட நட்பு, கல்லூரியில் சேர்ந்த பின் விடுபட்டது. அப்படியும் விடேன் தொடேன் என்று வளர்ந்த நட்பு இன்று வரை தொடர்கிறது. சந்தானம், புஷ்பவனம், ராமன்(சாக்ரடீஸ்), ஷ்யாம்சுந்தர்,, உப்பிலி ஸ்ரீனிவாசன், தேவாஜி (audco valves), ஜோசஃப் ராயன் போன்றவர்களின் நட்பு இறுக்கம் 1964க்குப் பின்பும் தொடர்ந்தது, தொடர்கிறது. பின்பு அலுவலகத்தில் சேர்ந்த பின்அங்கும் ஒரு நட்பு வட்டம் மலர்ந்து வளர்ந்தது. சிறு வயது முதலே ஒரு சில நட்புதான் தொடர்கிறது. எல்லோரிடமும் பிரியமாக இருந்தாலும் ஒரு சிலரிடம் மட்டும்தான் நாம் இணைந்து பழகுகிறோம். காதலுக்குமட்டுமல்ல. நட்புக்கும் ரசாயனம் தேவைப்படுகிறது. நட்பு வட்டத்திலும் ஒரு நெருங்கிய வட்டம் உண்டு. சந்தானத்திடம் பழகிய அளவு வேறு யாரிடமும் நான் பழகவில்லை. சந்தானம் மறைந்த பின்பும் அந்த ஸ்தானத்தை யாருக்கும் அளிக்கும் மனப்பாங்கும் வரவில்லை. நெருங்கிய நண்பர்களும் மிகச சிலரே. நானும் என் நெருங்கிய நண்பர் ஷ்யாமும் 55 வயதிலேயே இருக்கும் நட்பை வளர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினோம். அந்த வயதிற்கு பிறகு புது நட்பு வருவது கடினம். வந்தாலும் அது சுய நலமில்லா நட்பாக வளர்வது அரிது. எங்கள் உடன் படித்த ஒரு அன்பருடன் நட்பை வளர்க்க முயற்சி செய்து மிகப் பெரிய பாடம் கற்றோம். 15வயதில் பார்த்தவர் 50 வய்திலும் அதே உள்ளப் பாங்குடன் இருப்பதில்லை. அலுவலக நண்பர்கள் அலுவல் காரணமாகவோ, உயர்பதவி பெறுவதாலோ பல வேறு காரணங்களால் நட்பு இடைவெளி அதிகமாக சாத்தியங்கள் உண்டு.. எனக்கு பல நட்பு வட்டங்கள் உணடு. நாகை நண்பர்கள், அலுவலக் நண்பர்கள், சபரிமலை செல்வதால் வளர்ந்த நட்பு, கூட்டு முயற்சியில் வர்த்தகம் செய்வதால் உருவான (time tested) நண்பர் குழாம் என. அதிகமான நண்பர்களைப் பெற்றிருப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். நண்பர்களுடன் பேசுவதில்,பழகுவதில்.அவர்கள் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வதில் விவரிக்க இயலாத மன திருப்தி உண்டாகிறது. Tell me your friends, I will tell you who you are என்று சொலவடை உண்டு. சில நண்பர்களை இனனமும் நான் தேடிக்கொண்டு இருக்கிறேன். திரு.ஜோசஃப் ராயன்( microbiologist KMC) குப்புசாமி (Ex police wireless dept), ஸ்ரீதர் ( sivakavi family) மாங்குடி சிவராமகிருஷ்ணன்,(M.K.Varadarajan's brother) என சிலர். நாங்கள் கடந்த 15 வருடங்களாக Ngt Friends' Meet தொடர்ந்து நடத்தி வருகிறோம். எல்லோரும் வருடத்தில் ஒரு நாள் அல்லது நண்பர்கள் வசதிக்கேற்ப வேறிடத்திலோ சேர்ந்து, பழைய, நாகையில் வாழ்ந்த,வளர்ந்த நாட்களை, நினைவுகளை அசை போடுவதில் சுவை காண்போம். பழைய நண்பர்கள் புது வரவாக மீண்டும் கிடைப்பார்களோ என்ற எதிர்பார்ப்பும் உண்டு!!
with love and affection,
rangmani1951@gmail.com

வெள்ளி, 2 அக்டோபர், 2009

நாகை பெரிய கோயில்

அருள்மிகு காயாரோகணேஸ்வரர் உடன் உறையும் அன்னை நீலாயதாக்ஷி திருக்கோயில், காவிரி ஆற்றின் தெற்கே அமைந்த திருநாகை என்னும் நாகப்பட்டினம் நகரில், கடற்கரையிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டருக்குள் அமைந்திருக்கிறது. இக்கோயில் ஏறத்தாழ 6ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டதாகக் குறிப்புகள் கூறுகின்றன.. 

இத்திருக்கோயில், தேவார தலங்களில் 82ஆவதாகவும்,  64 சக்தி பீடங்களிலும், சப்தவிடங்க தலங்களில் ஒன்றாகவும் பெருமையாகத் திகழும் தலமாகும். 

ஆதிசேஷன், சிவபெருமானைப் பூஜித்த தலமாதலால், நாகப்பட்டினம் என்ற பெயர் ஏற்பட்டது என்று கூறுவர். 
 
புண்டரீக முனிவரின் பக்தியையும் தவத்தையும் மெச்சிய சிவபெருமான், அம்முனிவரைக் காயத்துடன் ஆரோகணித்து ஏற்றுக்கொண்ட காரணத்தால், இங்கு சிவன் காயாரோகணேஸ்வரர் ஆகிறார். இங்குள்ள சிவலிங்கம் புண்டரீக முனிவரால் தோற்றுவிக்கப்பட்டதற்கு அத்தாட்சியாக அவரின் திரு உருவம் உட்பிரகார கிழக்குப் பகுதி தூணில் அழகுற செதுக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலின் பின்புறம் உள்ள குளத்திற்கு, 'புண்டரீக குளம்' என்று பெயர். 

இந்திரனுக்கு உதவிய சாலீசுக மன்னனுக்கு, மன்னன் வேண்டியபடி, இந்திரன் பூஜித்து வந்த சுந்திர விடங்கர் விக்கிரகத்தை தர, அதை மன்னன் காயரோகணேஸ்வரர் சன்னிதிக்குத் தென் புறத்தில் பிரதிஷ்டை செய்தான். 

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த அதிபத்தி என்ற மீனவ சிவ பக்தர், பக்தி மேலீட்டால், தனக்கு கிடைக்கும் முதல் தடவை மீன் அனைத்தையும் உறுதியுடன் சிவனுக்கே அர்ப்பணித்தார். சோதனை விரும்பிய சிவபெருமான், சில நாட்கள் மீன் கிடைக்காமல் செய்ய, சிறிதும் கலங்காத அதிபத்தி பட்டினி கிடந்து, சிவனை வேண்டினார். மறுநாள் ஒரு மிக அழகிய மீன் கிடைத்தும் அதையும் பரமனுக்கே அர்ப்பணித்தார் பரம பக்த அதிபத்தி..  மறுநாள் கிடைத்த வெள்ளி மீனையும் அவ்வாறு ஆண்டவனுக்கே சமர்பித்தார்.  கடைசியாக எல்லோருக்கும் வாழ்நாள் முழுதும் வளம் பெற வைக்கத்தக்க, தக தகவென மின்னும் ஒரு தங்க மீனைப் பரமன் தர, யார் சொல்லியும் கேளாமல், அதையும் தான் போற்றும் எம்பிரான் காயாரோகணேஸ்வரருக்கே அர்ப்பணிக்க, அம்மையும் அப்பனும் மனமகிழ்ந்து, அவருக்குக் காட்சி தந்து, "சிவலோகம் சென்று சிவகணங்களுடன் சேர்ந்து, ஒப்பில்லாத பேரின்பம் அடைக" என்று அருள் வழங்கினார். 

அதிபத்தரும் பல நாட்கள் சிவன் தாள் போற்றி, அவன் அருளால் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து, சிவனடி சேர்ந்து முக்தி அடைந்தார். 'அதிபத்தி நாயனார்' என்ற திருநாமத்துடன், 49ஆவது நாயன்மாராக ஆட்கொள்ளப்பட்டார் என்பது நாகப்பட்டின தல வரலாறு.  இக்கோயிலில் அதிபத்தி நாயனாருக்கு ஒரு தனிச் சன்னிதி உள்ளது. 

அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் ஆகிய மூவராலும் பாடப்பட்ட தலம் இது. 

"வினையிலே விழுந்து அழுந்தி வேதனைக் கிடமாகாரே
கனையுமா கடல்சூழ் நாகைமன்னு காரோணத்தானை
நினையுமா வல்லூர் ஆகி உய்யலாம் நெஞ்சினீரே" 

என்று பாடுகிறார் அப்பரடிகள். 

திருக்கடையூரில் அபிராமி பட்டர், 

"தனம் தரும், கல்வி தரும், ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும், தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமிலா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பரென்பவர்க்கே
கனம் தரும் பூங்குழளாள் அபிராமி கடைக்கண்களே" 

என்று பாடியதற்கு ஒப்ப, 

பாயும் குதிரைகளும், யாளிகளும் அமைந்த, தோரணங்கள் அலங்கைரிக்கப்பட்ட, இருபுறமும் சக்கரங்கள் கொண்ட ரதம் போன்ற மகா மண்டபத்தில், பூப்பெய்த பருவத்தினளாய் 12 வயதுடையவளாய், பாசாங்குசம் ஏந்தி, அபய முத்திரையுடன், கரிய அகன்ற கண்களை உடையவளாய், அன்னை நீலாயதாக்ஷி (கருந்தடங்கண்ணி) மகப்பேறும், மகத்தான செல்வமும், வேண்டுபவர்க்கு வேண்டியதையும், நினைத்த நல்லவற்றை நடத்திக் கொடுத்தும், அழகுத் திருக்கோலத்தில் இருந்து அருளாட்சி செய்து கொண்டிருக்கிறாள். நிலவின் ஒளியை மறைக்கும் ஒளி மிகுந்த திருமுகம், அருளும் கருணையும், வாத்ஸல்யத்தையும் வாரி வழங்கும் நீலத்திருக் கண்கள்.

"நீ என்னிடம் வந்துவிட்டாய்,  இனி கவலை வேண்டாம் குழந்தாய், நீ நினைத்ததை நான் செய்து தருகிறேன்" என்று அபயம் அளிக்கும் அபய ஹஸ்தம். இத்திருக் கோலத்தை ஒரு தடவை மட்டும் தரிசித்தால் கூட நமது பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் மறைந்துவிடும். 

அன்னை கருவறைக்கு எதிரில்,  ஒரு கண்ணால் அம்பிகையையும், மற்றொரு கண்ணால் ஈசனையும் தரிசித்து மகிழ்வது போல், தலையைச் சற்றே சாய்த்து எழிலுடன் அமர்ந்திருக்கும் நந்தி தேவரின் சிலை காண்பதற்கும் தரிசிப்பதற்கும், கண் கொள்ளாக் காட்சி.. 

இது தவிர, இக்கோயிலின் சிறப்புகள் _ 

* நாகாபரண பிள்ளையார் தான் இக்கோயிலின் நுழைவாசலில் தனிக்கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார்;  பாம்புகளை நகைகளாக அணிந்துகொண்டு ஆசி வழங்கும் பிள்ளையார் இவர் ஒருவரே.  திருநாகேஸ்வரத்திற்கு முன்பான இக்கோயிலில், ராகு, கேது தோஷங்கள் உள்ளவர்கள் வழிபடவேண்டிய பிள்ளையாராக இருக்கிறார். 

* இங்குள்ள நவக்கிரகர்கள் சன்னிதியில் அவர்கள் அனைவரும் மேற்கு நோக்கியிருக்கிறார்கள் என்பதோடு, தசரத சக்கிரவர்த்தியினால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சனீஸ்வரர் தனியாக தெற்கு நோக்கி சாந்தமூர்த்தியாக அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார். 

* ஜீவ சமாதி அடைந்ததாக கருதப்படும் 18 சித்தர்களில் ஒருவரான அழுகுணி சித்தர் தனி சன்னிதியில் தவக்கோலத்தில் பக்தர்கள் வேண்டுவதை வழங்கிக் கொண்டிருக்கிறார். 

* நாயன்மார்களை தொகுத்து தேவாரம் பாடிய சுந்தரமூர்த்தி நாயனார் பொற்காசு பெற்றது இத்தலத்தில் தான். 

* அருணகிரிநாதர் தம் திருப்புகழில் போற்றி பாடப்பட்ட ஒரே கல்லிலான வள்ளி-தேவசேனா சமேத ஆறுமுகப் பெருமானின் அழகான திரு உருவம் இக்கோயிலின் கோனார் மண்டபத்தின் மேற்கு புறத்தில் அமைந்துள்ளது. 

* இக்கோயிலில் கல்லிலான சங்கிலி அமைக்கப்பட்டிருக்கிறது. 

* சப்தரிஷிகளுக்கும் ஈசன்  காட்சி கொடுத்த தலம் இது. 

அன்னை சக்தியின் ஆட்சி நடைபெறவது, மதுரையம்பதியில் மட்டுமல்ல. 

அவள்

* காஞ்சியில்  காமாட்சியாகவும்,
* காசியில் விசாலாட்சியாகவும்,
* நாகையில் நீலாயதாக்ஷியாகவும்
* ஆரூரில் கமலாக்ஷியாகவும்  

அருளாட்சி புரிந்துவருகிறாள். 
 
அதானால்தான், அன்னையைப் போற்றும்பொழுது, 

"அம்மை காமாட்சியே கருணா கடாட்சியே,
அரிய மதுரை ஆளும் மீனாட்சியே
நம்பும் அடியார்கள் கண்ணுறும் காட்சியே
நாகையதனில் வாழும் நீலாயதாக்ஷியே
சம்பு மோகித்திடும் காசி விசாலாக்ஷியே
சாலத் திகழும் ஆரூர் கமலாக்ஷியே
அடியாரைக் கரையேற்றும் அகிலாண்ட நாயகியே
கும்பிட்டு உனதடி குறுகிப் பணிந்தோம்
கெளரியே எழுந்தருள்வாயே" 

என்று போற்றி வணங்குகிறோம். 

இத்துணை சிறப்புகள் வாய்ந்த இத் திருக்கோயில், பக்தர்கள் அதிக அளவில் தரிசிக்க வராததால், சரிவர பராமரிக்க முடியாத நிலையில் இருப்பது, வருந்தத்தக்கதாக இருக்கிறது. அரசும், அதைச் சார்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இன்னும் நன்றாகக் கவனித்தால், சரித்திரப்புகழ் பெற்ற பழமையான இத் திருக்கோயில் அதற்குரிய மதிப்பையும் புகழையும் மீண்டும் பெற்று, திருவிழாக்கள் அனைத்தும் நல்ல முறையில் நடத்தப்பட்டு, சீரும் சிறப்புடன் திகழ உறுதுணையாகும் என்பது நிச்சயம்.

பக்தர்களும் இக்கோயிலுக்கு அடிக்கடி சென்று, சக்தி வாய்ந்த அன்னை நீலாயதாக்ஷி சமேத காயாரோகணேஸ்வரர், மற்றும் இதர தெய்வங்களின் அருளுடன் எல்லா ஐஸ்வர்யங்களும் பேறும் பெற்று நலமுடனும் வளமுடனும் வாழ்ந்திட பிரார்த்திக்கிறோம். 

"கண்கவர் தங்கமய நீலாயதாக்ஷி
என்றென்றும் நமஸ்காரம் ஏற்றருள் புரிவாயே!"
-- நாகை வை. ராமஸ்வாமி

நன்றி : chennaionline

புதன், 30 செப்டம்பர், 2009

நாகை தமிழ்

நாகப்பட்டினம் - தமிழ் - இரண்டையும் ஒருங்கே நினைத்துப் பார்த்தால் - நாகையில் நான் பயின்ற தமிழ் குறித்துத்தான் - எண்ணத் தோன்றுகிறது. எட்டாம் வகுப்புக்குப்பின் - ஆங்கில மொழிக் கல்விக்கு தடம் மாறிவிட்டதால், அதுவரை தமிழை ஒரு பாடமாக - நினைத்து தேர்ச்சி பெற வேண்டிய அளவுக்கு, மதிப்பெண் எடுக்க , என்று படித்த காலம் போய், தமிழை, தமிழுக்காக படித்த காலம் ஆரம்பமானது. இலக்கணம் கிடையாது, கட்டுரை,  துணைப் பாடம் இத்யாதிகள் கிடையாது. அந்தக் காலத்தில் எங்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க சு பன்னீர்செல்வம் என்று ஓர் ஆசிரியர் வந்தார். ஆசிரியப் பணி அரை மணி - அரட்டை மற்றும் அக்கப்போர் - அரை மணி என்று வகுப்பு நடத்துவார். (பொன்னியின் செல்வன் படித்துவிட்டு - நாகப்பட்டினம் புவியியல் குறித்து அவர் அவிழ்த்துவிட்ட அரை டஜன் 'டுப்'புகள் இப்பொழுதும் எனக்கு கனவில் வருகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் - எவ்வளவு பலமான தாக்கம் என்று!)  அப்பொழுது பதவியைப் பிடித்த ஒரு மூன்றெழுத்துக் கட்சி மீதும், அதற்கு பெரும் பங்கு காரணமாயிருந்த ஒரு மூன்றெழுத்து நடிகர் மீதும் அவருக்கு நிறைய பக்தி. ஒரு கிறித்துவப் பாதிரியாரின் மகனாக இருந்ததால், வாய்ப்பு வாய்க்கும்போதெல்லாம் இந்துக் கடவுள்களை ஜாடை மாடையாக கிண்டல் செய்வார். ஆனால் எல்லை மீறியதில்லை.
மாணவர்களிடம் அவர் ஒரு முறை தேர்வு எழுதப்  பின்பற்ற வேண்டிய யுக்திகள் குறித்து  சொல்லும்பொழுது - விடைத் தாளில் பிள்ளையார் சுழி போடாமல் - மாணவர்கள் கீழ்க் கண்ட வரிகளில் ஏதேனும் இரண்டு வரிகளை எழுதி, பிறகு தமிழ்த தேர்வு எழுதினால் - விடைத்தாள் திருத்துபவரைக் கவரலாம் என்று கூறினார்.
அவற்றில் சில இதோ:
தேனொழுகும் தீந்தமிழே - நீ கனி, நான் கிளி 
வேறென்ன வேண்டும் இனி!
இறக்கின்ற நிலையினிலும் - இன்பத தமிழே உன்னை
மறக்காது நான் ஓத வேண்டும்.
இதுமாதிரி - அவர் பத்து இருவரிக் கவிதைகள் எழுதிப் போட்டார் - கரும்பலகையில். மாணவச் செல்வங்கள் - அதை எல்லாவற்றையும் தங்கள் நோட்டில் பக்தி சிரத்தையுடன் எழுதிக் கொண்டனர். 
அந்த ஆண்டு - தமிழ்ப் புத்தகத்தில் பாடம் முடிவில்  - கேள்விகள் இருக்காது -- கேள்விகளையும், அவற்றிற்கான பதில்களையும் மட்டும் மனப்பாடம் செய்து - அதை அப்படியே தேர்வில் எழுதி - மதிப்பெண் பெறுவது என்ற மனோபாவத்தில் வளர்ந்த பல மாணவர்கள் அந்த காலக்கட்டத்தில் மிகவும் திணறிப் போய்விட்டார்கள். காலாண்டுத் தேர்வில் - அந்தத் தமிழ் ஆசிரியர் - கேள்விகளை -- மிகவும் கடினத் தமிழில் -- உதாரணமாக " பொய்யா விளக்கு பற்றி ஆசிரியர் புகலுவதைப் புகலுக ", "வரைந்தவைகளை வரைக", "அறைந்தவைகளை அறைக ", "விளக்குபவைகளை விளக்குக " என்றெல்லாம் அமைத்து - தன புலமையைக் காட்டியிருந்தார்.
அந்தக் காலாண்டுத் தேர்வில் மாணவர்கள் எழுதியிருந்த விடைத் தாள்களை -- திருத்தி, மதிபெண்களுடன்  திருப்பிக் கொடுக்கும் நாளில் - அந்த ஆசிரியர் எவ்வளவு திண்டாடிப் போயிருப்பார் என்று தெரிந்தது.
பல மாணவர்கள் அவர் எழுதிப் போட்ட - எல்லா இரு வரிகளையும் பக்தியோடு எழுதி, வேறு விடைகள் எதுவும் எழுதாமல் விட்டிருந்தனர். விடைகளுக்கு பதிலாக - அந்த இரு (பது) வரிகள் போதும் என்று நினைத்திருந்தனர் போலிருக்கிறது.
ஒரு மாணவர் இரண்டே வரிகள்தான் எழுதியிருந்தார்.
" இறக்கின்ற நிலையில் இருக்கும் இன்பத் தமிழே!
நீ கிளி - வேறென்ன வேண்டும் இனி?"

சனி, 26 செப்டம்பர், 2009

வாக் தி டாக்!

கடந்த எட்டு வருடங்களாக காலையில் நானும்,  நண்பர் ஷ்யாமும் சுமார் ஒரு மணி நேரம் நடப்போம்ஷ்யாம் வீடடில் காபி குடித்துவிட்டு நடக்கத் தொடங்குவோம்ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி அமையும்சற்று சீக்கிரம் செல்வோம் என நினைத்தால் எல்லார் வீட்டிலும் பெருக்குகிறோம் என்ற பெயரில் தூசியை பறக்கவிட்டு எங்கள் தும்மலை பெருக்குவர்ட்ராஃபிக் அதிகம் இருக்காது என்ற கணிப்பில் வண்டிகள் வெகு வேகமாகக் கண்டபடி செல்லும்சென்ற வாரம் அந்தக் காலை வேளையில், ஒரு பெண், அப்பாவுடன் கார் ஓட்ட கற்றுக் கொள்கிறேன் என்று ஒரு திருப்பத்தில் தேமே என்று வந்து கொண்டிருந்த பேப்பர் போடும் பையனின் சைக்கிளில் மோதிவிட்டாள்நாங்கள் அந்த பையனின் பக்கத்தில் வந்து கொண்டிருந்தோம்சற்று தப்பியிருந்தால் எங்கள் மேலும் இடித்திருப்பாள்இதில் கொடுமை என்னவென்றால் கார்க்காரர் டேமேஜ் ஆன சைக்கிளுக்கு 50 ரூபாய் கொடுத்து எஸ்கேப் ஆகிவிட்டார்அடிபட்ட பையன் சிதறிய பேப்பர்களை சேகரிப்பதில் முனைப்பாகிவிட்டான்பாவம் அப்பாவிப் பையன்!. சாலையில்நடப்பவர்களுக்கு உள்ள அசௌகர்யங்களில் இதுவும் ஒன்றுநாம் பாட்டுக்கு நடக்கிறோம் என்று இல்லாமல் நாலா பக்கமும் பார்க்கவேண்டும்காலையில் நிதானமாக எழுந்து சற்று லேட்டாக போனால் காலை வெய்யில் கூட சுட்டெரிக்கும்!

நாங்கள் நடப்பதற்கு தேர்ந்தெடுதத ஏரியா அசோக நகர் மே.மாம்பலம் பார்டர் சாலைகள்நாங்கள் நடக்க காரணம் உடல் எடை குறைப்பு/அதிகரிப்பு ஆகாமல் இருக்க. .ஷ்யாமும் நானும் மாட்ச் ஆனதற்கு நாங்கள் நீண்ட கால நாகை நண்பர்கள் என்ற காரணம் மட்டுமில்லைஷ்யாம் நிறைய பேசுவார்நான் நிறைய கேட்பேன் தவிர இருவருக்கும் டயபெடிஸ் உண்டு!! பேசாமல் வாக் செய்ய வேனண்டுமென்று சிலர் சொல்வார்கள்ஷ்யாம் நிறைய்ய செய்திகள் சொல்வார்டாபிக் இது அது என்று கிடையாதுதெரு கிசுகிசுஆஃபிஸ் கிசு கிசுபாலிடிக்ஸ் என்று எல்ல விஷயங்களையும் அலசுவோம். inspiration for walk is talk! மற்ற நேரங்களில் வெளியில் போனால் ஊர் சுற்றுகிறாயென்னும் வீட்டினர், காலையில் நடந்தால் ஒன்றும் சொல்வதில்லை

இப்போது நிறைய பேர் வாக் செய்கிறர்ர்கள். டாக்டர்கள் சர்வ ரோக நிவாரணியாக இதை பரிந்துரைப்பதாலும்அதிக செலவில்லா சமாச்சாரம் என்பதாலும்ஒருவிதமான தப்புதல்(escape) காரணி என்பதாலுமோ(?) வயதானவர்கள் பெரும்பாலும் துணைவியருடன் வருகிறார்கள்அவர்களைப் பர்ர்த்தால் நமக்கும் உத்வேகம் வரும்வழக்கமாக நடப்பவர்களைப் பார்க்கும்போது உடனே பேசமாட்டோம்சில காலம் சென்று முறுவலித்து பின் ஹெல்லோ சொல்லும் அளவிற்கு கடந்த பின் அளவளாவலாம் என்ற ஸ்டேஜ் வரும்போது அனேகமாக இருவரில் ஒருவர் வர இயலாமை ஏற்பட்டுவிடும்இரயில் ஸ்னேகிதம் போல்தான் இந்த வாக் ஸ்னேகமும்!

சாலையில் நடப்பவர்களைவிட பார்க்குகளில் உலாத்துபவர்கள் சற்றே வித்யாசப்படுவார்கள். எப்படி? இவ்வளவு சுற்றுதான் என்று கணக்கிட்டு நடப்பர்வண்டிகள் தொந்திரவு இல்லாததால் ஹெட்செடடுடன் நடை பழகுவர்நடக்கையில் மீண்டும் மீண்டும் ஒருவரை கடந்து செல்கையில் பார்க்க வேண்டியிருப்பதால் இவர்கள் இளமுறுவல்கூட காண்பிக்கமாட்டார்கள்.

சில பெரியவர்கள் சற்றே அசட்டு தைர்யத்துடன் வயதுக்கு பாந்தமில்லாத பயிற்சிகளை செய்வார்கள். சொன்னாலும் ஒப்பபுக்கொள்ளமாட்டார்கள்அவர்கள் வேகமாக தலையை சுழற்றும்போது எங்கே தலைசுற்றி மயக்கமாகப் போகிறார்களோ என்று பயம் வரும்

வயதான பெண்களும் காலையில் பார்க்குக்கு வருவார்கள். அவர்கள் சற்றே கூச்சத்துடன் சிறார்களுக்கான ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவார்கள்இளமைக்காலத்திலோசிறு பிராயத்திலோ நேரமோசுதந்திரமோ இல்லாமல் இருந்திருப்பார்களோஅவர்கள் ஒருவருக்கு ஒருவர் அளிக்கும் அட்வைஸ்களைத் தொகுத்தால் பல டீவி மெகா சீரியல்களுக்கான கரு கிடைத்துவிடும்தொடர்ந்து வாக் போவதால் அங்கு வருபவர்களைப்பற்றி ஓரளவிற்கு அனுமானம் உண்டாகும்வெவ்வேறு பென்சுகளில் அமர்ந்து செல்லில் உரையாடியவர்கள் (பிறர் யாரும் அறியமாட்டார் என்ற நெருப்புக்கோழி நம்பிக்கைசில காலத்திற்குப் பின் கைகோர்த்து செல்வர்.. வாழ்த்துக்கள்! பார்க்கில் பிறிதோரிடத்தில் RSS ஷகா நடக்கும்சிறுவர்களை எப்படி கவ்ர்ந்து அவர்கள் இயக்கத்தில் ஈடுபடுத்துகிறார்கள் என்பது புரியாத புதிர்.

சில வருடங்களுக்கு முன் ஸைக்கிளில் அருகம்புல் ஜூஸ் கொண்டு வந்த பெண்மணி, இன்று மாருதி வானில் பல வேறு பாத்திரங்களில் கலர் கலரான திரவங்களை கொண்டு வந்து வியாபாரம் செய்கிறார்அவர் எங்கு புல் வளர்க்கிறார்எப்போது புல் பறிக்கிறார்?? எப்போது அரைக்கிறார்?? நல்ல தண்ணீர்தானா?? என்றெல்லாம் கேள்விக் கணைகள் மனதில் தோன்றினாலும் மக்கள் அருகம்புல் ஜூஸ் குடித்தால் உடம்பிற்கு நல்லது என்று தீவிரமாக நம்புவதால் மேற்கொண்டு ஆய்வதில்லை!

தினமும் நடந்து பழகி விட்டால் பின் ஒரு நாள் வாக்கிங் போகாவிட்டால் கூட ஒரு வெறுமை தோன்றும்!

with love and affection,
rangan

புதன், 16 செப்டம்பர், 2009

நாகை திரை அரங்குகள்

நாகை திரை அரங்குகள்
           சென்னையில் தற்பொழுது நூற்றுக்கணக்கான  திரை அரங்குகள் இருக்கின்றனபெயர் போன 10 அல்லது 15 அரங்குகளைத் தவிர பெரும்பாலான அரங்குகளுக்கு நான் போனதில்லைஆனால் நாகப்பட்டினத்தில் சிறு வயதில் சினிமா பார்க்கவேண்டும் என்ற ஆசை  அதிகம்.  நாகையில் மூன்றே அரங்குகள்தான் இருந்தனஅதில் ஒரு அரங்கில் அதிக பட்சமாக 10 அல்லது 12 படங்கள்தான் ஒரு வருடத்தில் திரையேறும்பெரும்பாலான படங்கள் மிகப் பழையவைபுதுப் படம் என்பது பெரிய ஊர்களில் 100,150 நட்கள் ஓடிய பின்பு எங்கள் ஊருக்கு மெதுவாக வரும்.  புது(!) படங்கள் பெருவாரியாக தீபாவளிஅல்லது பொங்கல் சமயத்தில் ரிலீஸ் ஆகும்மூன்று தியேட்டர்களிலும் மாற்றி மாற்றி படம் பார்ப்போம்
          நாகையில் 1962 வரை இரண்டு தியேடர்தான் இருந்தது.  ஸ்டார் டாக்கீஸ் மற்றும் ,பேபி டாக்கீஸ்பின் சிவகவி சுப்ரமணிய அய்யர் கட்டிய ஜயலக்ஷ்மி தியேட்டர் வந்ததுபேபி டாக்கீஸ் 1962 வாக்கில் திரு  ADJ அவர்களால் வாங்கப்பட்டு, பாண்டியன் தியேட்டர் என்று நாமகரணம் செய்யப்பட்டதுஇதைத் தவிர நாகூர் ராஜாகீழ்வேளுர் டூரிங்க் டாக்கீஸ் போன்றவைகளும் எங்களூர் கணக்கில் சேர்த்துக் கொள்வோம்!
          புதுப் படம் வருவதை மாட்டு வண்டியில் பேண்டு சகிதம் வீதி வீதியாக வந்து பிட் நோட்டிஸ்களை தருவதன் மூலம் அறிவிப்பார்கள்வண்டியின் பின் பக்கம் அமர்ந்து கொண்டு டகர டகர என்று ஒலி எழுப்பும் முகம் நன்றாக ஞாபகம் இருக்கிறது கதை சுருக்கம் சிறு புத்தகமாக கிடைக்கும்பெரிய சைஸ் கலர் பேப்பரில் கவர்ச்சியாக அச்சிட்டும் பறக்க விடுவார்கள்பெரிய பெரிய் போஸ்டர்களை தட்டியிலும் சுவர்களிலும் ஒட்டுவார்கள்படம் ஆரம்பிக்க சுமார் 1 மணி நேரத்திற்கு முன்பாக பக்தி பாடல் ஒலி பரப்புடன் ஆரம்பித்து புதிய சினிமா பாட்டுடன் முடிப்பார்கள்.
         ரயில் எஞ்சின் டிரைவர் வேலைக்கு சற்று மதிப்பு குறைந்த, ஆனால் எங்களைக் கவர்ந்த வேலை தியேட்டர் மேனேஜர் வேலைதான்ஸ்டார் தியேட்டர் மேனேஜர் ராஜகோபாலைக் கண்டால் கொஞ்சம் பயம்தான்டிக்கட் வாங்க க்யூவில் நிற்பவர்களை மிரட்டியும்சமயத்தில் அடிக்கவும் செய்வார்அதைப்பார்த்து போலிஸ் ரேஞ்சுக்கு அவர்மேல் மரியாதை கலந்த பயம்.
         ஸ்டார் தியேட்டர் மிகப் பழையதுஒரே ப்ரொஜெக்டர்தான்அதனால் 6 இடைவேளை உண்டுசிறு வயதில் தரை டிக்கட்தான்ஒரே பீடி நாற்றத்துடன் படம் பார்க்கவேண்டும்குறுக்கும் நெடுக்குமாக் இஷ்டப்படி உட்காரலாம்முன்னால் இருப்பவர் மறைத்தால் கேட்க பயம்அதனால் இங்கும் அங்குமாக நகர்ந்து பார்க்க வேண்டும்! படம் ஆரம்பிக்குமுன் வார்-ரீல் எனப்படும் நியூஸ் கட்டாயம்அந்தக் குரலும் ம்யூஸிக்கும் நினைத்தாலே  மனதில் கரகரவென்று பிராண்டும்இன்டெர்வெல் விடும் போதெல்லாம் வெளியில் செல்வோம்திறந்தவெளி கக்கூஸ்தான்ஆனால் அப்போது இந்த அளவுக்கு வியாதிகள் பெருகவில்லை
         பாண்டியன் தியேட்டர் இரண்டு ப்ரொஜெக்டருடன் சற்றே நவீனமாக இருந்தது. 3 இடைவேளைகள்அந்த தியேட்டர்  முட்டை வடிவ போண்டா நண்பர்கள் மத்தியில் ப்ராபல்யம். வீட்டினருடன் பாண்டியன் தியேட்டர் போவதென்றால், குதிரை வண்டியில் செல்வோம்குறுக்கே ஒரு ரயில்வே கேட்டும் வரும்எபபவோ க்ராஸ் செய்யும் ட்ரயின் அல்லது கூட்ஸ் ஷண்டிங்காக்க வைத்து சினிமா பர்ர்க்கும் டென்ஷனை உயர்த்தும் .ஸ்கூலில் இருந்து கட் அடித்து செல்லும் போது CSI ஸ்கூல் குறுக்கு வழியில்ரயில் ட்ராக்குகளை தாண்டிரோலிங்க் மில் ஓரமாக ஓடி தாண்டி குதித்து செல்வோம்படத்தை மிஸ் பண்ணலாமா?
       பள்ளியில் வெள்ளிக்கிழமை மேட்னி ஷோவில் ஹிந்தி அல்லது ஆங்கில படம் மாடினீ ஷோவாக வரும். 10வது படிக்கும்போது மஹாலிங்கம் சார் க்ளாஸை கட்டடித்து விட்டுப் போவதில் மிகுந்த த்ரில்படம் அவ்வளவாக புரியாதுஆனாலும் பாட்டு நன்றாக இருந்தது/இல்லை/.ஃபைட்டிங் சுமார் என்ற ரீதியில் பொதுவாக கமண்ட் அடித்து வைப்போம்சோமு ஒரே ஒரு  படத்தை பார்த்துவிட்டு 4 விதமான கதைகள் தயார் பண்ணிவிடுவான்அந்த கால கட்டத்தில் சினிமாவும் தியேட்டர்களும் மிக முக்கியமான விஷயங்கள்.அதனுடன் ச்ம்பந்தப்பட்ட்டவர்களும் முக்கியஸ்தர்களாகக் கருதப்பட்டனர். .
With love and affection,
Rangan